ரிசாதுக்கு எதிராக கொலை - தீவிரவாத குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Saturday, 8 June 2019

ரிசாதுக்கு எதிராக கொலை - தீவிரவாத குற்றச்சாட்டுரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொலை - தீவிரவாத மற்றும் அடிப்படைவாத தொடர்புகள் பற்றி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.அமைச்சர் பதவியைத் துறந்துள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் நேற்றைய தினம் அமைச்சின் கீழான திணைக்களம் ஒன்றின் பணிப்பாளரை மாற்றும் உத்தரவு ரிசாதினால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சதொச வாகனங்கள் தீவிரவாதிகளின் பிரயாணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் எஸ்'.பி. மேலும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் ரிசாத் கைது செய்யப்பட்டால் மாத்திரமே முறையான விசாரணை நடைபெறும் எனவும் எஸ்.பி. திசாநாயக்க தெரிவிப்பதோடு அமைச்சு பதவியைத் துறந்து விட்டதாக தெரிவித்துக் கொண்டு அரசின் வாகனங்கள், பாதுகாப்பு அணியென தொடர்ந்தும் தமது வசதிகளைப் பாவிப்பதாகவும் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக இராவணா பலய சார்பிலும் முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment