
ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் ஒருவரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே.
பெரும்பாலும் கரு - சஜித் இடையே தெரிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்சமயம் கரு ஜயசூரியவுக்கே கட்சி மட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை சஜித் பிரேமதாசவுக்கும் கட்சிக்குள் ஆதரவு நிலவுகிறது.
பெரமுன வேட்பாளரைத் தாம் அறிவிக்கத் தயார் என பசில் தெரிவித்துள்ள அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது வேட்பாளரை அறிவிக்க முன்னர் அவசரப்படப் போவதில்லையென மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment