மைத்ரி 'தெரிந்து கொண்டே' அரசியல் விதிகளை மீறுகிறார்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Friday, 7 June 2019

மைத்ரி 'தெரிந்து கொண்டே' அரசியல் விதிகளை மீறுகிறார்: விஜேதாச


நாட்டின் பாதுகாப்பு கட்டளைத்தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிந்து கொண்டே சட்ட விதிகளை மீறியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.ஈஸ்டர் தாக்குதல் பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடாத்துவது கேள்விக்குரியது எனவும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பற்றிய இரகசிய தகவல்களை பொலிஸ்மா அதிகர், ஜனாதிபதி மற்றும் முப்படைத் தளபதி மாத்திரமே அறிந்து கொள்ள முடியும் எனவும் இதையும் மீறி நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடாத்துவதும் அதனை அனுமதிப்பதும் விதி மீறல் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

பொறுப்புள்ள பதவியிலிருக்கும் மைத்ரி அதற்கேற்ப செயற்படத் தவறி விட்டதாக தெரிவிக்கும் விஜேதாச, தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் ஊடாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் சபாநாயகர் ஏற்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு புலனாய்வு அதிகாரிகளை விசாரிக்க முடியாது என ஜனாதிபதி இன்றைய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment