ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் திலும் அமுனுகம.
ரிசாத் பதியுதீன் மாத்திரமன்றி ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்ற நிலையில் குறித்த நபர்களை கைது செய்யாது விடினும் ஆகக்குறைந்த அளவில் விசாரணையாவது நடாத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றமையும் ரிசாத் பதியுதீன் ஏலவே இராணுவ தளபதியை தொடர்பு கொண்டு சந்தேக நபர் ஒருவரைப் பற்றிப் பேசிய விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment