இராணுவ தளபதியை 'தொடர்பு' கொண்டது உண்மை: ரிசாத் - sonakar.com

Post Top Ad

Friday, 17 May 2019

இராணுவ தளபதியை 'தொடர்பு' கொண்டது உண்மை: ரிசாத்


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பெருமளவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டு கைதான ஒருவர் பற்றி பேசியதாக இராணுவ தளபதி நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், தான் அவ்வாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டது உண்மையென தெரிவிக்கின்ற அமைச்சர் ரிசாத், இருப்பினும் தான் யாரையும் விடுவிக்கும் படி கோரிக்கை விட வில்லையென மறுதலித்துள்ளார்.

குறித்த உரையாடலின் போது, தான் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு பற்றி மாத்திரமே பேசியதாக ரிசாத் தெரிவிக்கின்றமையும் சந்தேக நபர் ஒருவர் பற்றியே (தெஹிவளையின் கைதான நபர்) குறித்த உரையாடல் அமைந்ததாக இராணுவ தளபதி தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment