
நாத்தாண்டிய, தும்மோதர பகுதியில் வன்முறையாளர்களை முன்னேறி வருமாறு அழைப்பு விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ உறுப்பினர் குற்றம் எதுவும் செய்யவில்லையெனவும் அவர் அத்தருணத்தில் தோள் பட்டியையே சரி செய்திருக்கிறார் எனவும் விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க.
இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் இளைஞர்களை இராணுவத்தினர் முழந்தாழிட வைத்த காணொளியொன்றும் வெளியாகியிருந்தது. முன்னராக இராணுவ சீருடையில் இருந்த நபர் யார் என பொது மக்களிடம் தகவல் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது, அவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தோள் பட்டியையே சரி செய்ததாகவும் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment