இம்ரான் கானுக்கு 'நோபல்' பரிசு: பாக். நாடாளுமன்றில் பிரேரணை - sonakar.com

Post Top Ad

Sunday 3 March 2019

இம்ரான் கானுக்கு 'நோபல்' பரிசு: பாக். நாடாளுமன்றில் பிரேரணை


இந்தியாவுடனான பதற்றத்தை லாவகமாக தணித்து அமைதியை நிலை நாட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்றில் பிரேரணையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ள அந்நாட்டின் பிரதமர் மோடி, யுத்தமொன்றை ஆரம்பிக்க எத்தனித்த போதிலும் அது இம்ரான் கானின் சாணக்கியமான நகர்வினால் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட விமானியை உடனடியாக திருப்பி ஒப்படைத்து சமாதானத்தை நிலை நாட்டிய இம்ரான் கான், கௌரவிக்கப்பட வேண்டும் என பாக். அரசியல் தலைமைகள் தெரிவிக்கின்றமையும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு அறியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment