லால் காந்தவை விலக்கும் யோசனை இல்லை: JVP - sonakar.com

Post Top Ad

Sunday 3 March 2019

லால் காந்தவை விலக்கும் யோசனை இல்லை: JVP

https://www.photojoiner.net/image/N04Nrutt

அநுராதபுர பகுதியில் விபத்தொன்றில் தொடர்பு பட்டுள்ளதுடன் குடிபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசியல்பீட உறுப்பினர் லால் காந்த கட்சியை விட்டு விலக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லையென விளக்கமளித்துள்ளது ஜே.வி.பி.விபத்தை அடுத்து லால் காந்த எங்கும் தப்பியோடவில்லையெனவும் சட்டம் தன் கடமையைச் செய்ய ஒத்துழைத்துள்ளதாகவும் முறைப்படி அவரைப் பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் நாலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணியில் லால் காந்தவுக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment