பின் லேடன் மகனின் தலைக்கு $1 மில்லியன்: அமெரிக்கா அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 1 March 2019

பின் லேடன் மகனின் தலைக்கு $1 மில்லியன்: அமெரிக்கா அறிவிப்புதனது தந்தையின் கொலைக்கு அமெரிக்காவைப் பழி வாங்க வேண்டும் என பிரச்சாரம் செய்து,  தீவிரவாத அமைப்பின் முன்னணி தலைவராக மாறி வரும் ஒசாமா பின்லேடனின் புதல்வர் ஹம்சா பின் லேடனின் தலைக்கு 1 மில்லியன் டொலர் பரிசை அறிவித்துள்ளது அமெரிக்கா.இரு வருடங்களுக்கு முன்பாக ஹம்சா பின்லேடனை தீவிரவாதியென அறிவித்திருந்த அமெரிக்கா, தற்போது அவரது தலைக்கு 'விலை' அறிவித்துள்ளது.

ஆப்கனிஸ்தானில் ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய போது ஒசாமா பின்லேடனுக்கு முழு அளவில் இராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்கா, பிற்காலத்தில் அவரை தீவிரவாதியென கூறியதோடு 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது புதல்வரையும் தேடியழிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment