புராதன தூபியில் ஏறிய மூதூர் இளைஞர்கள் விடுதலை! - sonakar.com

Post Top Ad

Friday 1 March 2019

புராதன தூபியில் ஏறிய மூதூர் இளைஞர்கள் விடுதலை!



மிகிந்தலை புராதன தூபியில் ஏறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூதூரைச் சேர்ந்த இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



பலரது தீவிர முயற்சியில் மாணவர்கள் அறியாது தவறிழைத்துள்ளதாக சுட்டிக்காட்டி முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாணவர்களை விடுவித்துள்ளார். இது குறித்து  அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் அவரது ஒத்துழைப்புடன் அமைச்சிலிருந்து மேலதிக ஆவணங்கள் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், இறுதி நேரத்திலேயே ஆவணங்கள் பெறப்பட்டிருந்த நிலையில், ஒரு தினத்துக்குள் அதனை நீதிமன்றுக்கு அனுப்பி வைக்க மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி உதவியிருந்தார்.

அமைச்சின் செயலாளருடனான தொடர்பாடலை முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஏற்பாடு செய்திருந்ததோடு முஸ்லிம் கவுன்சில் உட்பட சிவில் சமூக முக்கியஸ்தர்கள் இதில் சிரத்தையுடன் பங்கேற்று கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment