சுதந்திர தினம்: இங்கிலாந்து மகாராணியாரிடமிருந்து வாழ்த்து! - sonakar.com

Post Top Ad

Saturday 2 February 2019

சுதந்திர தினம்: இங்கிலாந்து மகாராணியாரிடமிருந்து வாழ்த்து!


இலங்கை, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு 71 வருடங்கள் நிறைவுறும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு சுதந்திர தின வாழ்த்தினை அனுப்பி வைத்துள்ளார் இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபத்.அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடனும் செல்வத்துடனும் வாழ தான் வாழ்த்திக் கொள்வதாக அவ்வாழ்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1972 வரை டொமினியன் முறை மூலம் பெயரளவில் இலங்கை மீதான ஆதிக்கத்தை இங்கிலாந்து வைத்திருந்தது. இந்நிலையில் 1972 ஜுன் மாதம் இலங்கை பூரண குடியரசாக உருவெடுத்திருந்தமையும் தொடர்ந்தும் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment