மேலும் 36 பேருக்கு 'அமைச்சு' பதவிகள்: கிரியல்ல விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 February 2019

மேலும் 36 பேருக்கு 'அமைச்சு' பதவிகள்: கிரியல்ல விளக்கம்!


தேசிய அரசு அமைப்பதன் மூலம் மேலும் 36 பேர் அமைச்சு, பிரதியமைச்சு மற்றும் கபினட் அந்தஸ்த்தற்ற அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக விளக்கமளித்துள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதியமைச்சு மற்றும் கபினட் அந்தஸ்த்தில்லாத அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை கூட்டாக 27 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய அரசு ஊடாக அமைச்சரவையின் எண்ணிக்கை 48 ஆகவும் அடுத்த பிரிவுக்குள் 45 பேரையும் உள்வாங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment