நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலை மீது தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Saturday 2 February 2019

நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலை மீது தாக்குதல்


நிந்தவூர்-09ம் பிரிவு கடற்கரை வீதியில் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலையை 02-02-2019. நேற்றிரவும் இன்று அதிகாலையிலும் இனந்தெரியாத காடையர்களால் கல்வீசி தாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அங்குள்ள வைத்திய அதிகாரி Dr.நபீல் அவர்கள் கூறுகையில் நேற்றிரவு சுமார் 7:30 மணியளவில் வைத்தியசாலை கூரைகளில் கற்கள் விழும் சத்தம் கேட்டதும் என்ன நடக்கின்றதென வெளியில் வந்து பார்த்தபோது இன்னும் கற்கள் வீசப்படுவதை உணர்ந்ததாகவும், அத்தோவேளையில் அங்கு சிகிச்சைக்காக தங்கியிருந்த இரண்டு நோயாளிகளும் பயத்தில் அங்கிருந்து தப்பியோடியதாகவும் வைத்தியர் கூறினார்.
ஏற்கனவே இவ்வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள MOH காரியா கண்ணாடி ஜன்னல்களும் எறிந்து தாக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்திற்கு ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்றினை அமைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருக்கும்போது இதுபோன்ற காடைச் செயல்கள் இங்கு அடிக்கடி இடம்பெறும்போது எமது சேவைக்கு இது இடையூறாக அமைகின்றதென வைத்தியர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இது தொடர்பாக சம்மாந்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகினன்றனர்.

-முஹம்மட் ஜெலீல்

No comments:

Post a Comment