மேலும் அமைச்சர்கள் வேண்டாம்: பெரமுன விசனம்! - sonakar.com

Post Top Ad

Saturday 2 February 2019

மேலும் அமைச்சர்கள் வேண்டாம்: பெரமுன விசனம்!


தேசிய அரசு என்ற போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்வதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது மஹிந்த அணி.பல கட்சிகள் இணைந்தே தேசிய அரசாங்கம் உருவாக வேண்டும் எனவும் ஏலவே அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைவது தேசிய அரசாகாது எனவும் பெரமுனவின் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ள அதேவேளை முன்னதாக இதே கருத்தினை ஜே.வி.பியும் தெரிவித்திருந்தது.

எனினும், பெப்ரவரி 7ம் திகதியளவில் தேசிய அரசுக்கான உத்தியோகபூர்வ பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி முன் வைக்கவுள்ளாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment