மாத்தளை: டோல வீதி புனரமைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 16 February 2019

மாத்தளை: டோல வீதி புனரமைப்பு


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாத்தளை மா நகர சபை உறுப்பினர் சபருல்லாஹ் மற்றும் அமைப்பாளர் ஐயூப் ஆகியோரின் வேண்டுகோளின் படி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் ரூபா 26 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மாத்தளை - டோல வீதி காபட் இட்டு புனரமைக்கப்பட்டது.இவ் வீதியானது பல வருடங்களாக செப்பனிடப்படாது குன்றும், குழியுமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாக வீதியைப் பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாக பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளான நிலையிலேயே, தற்போது இது காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

-டீ.எம்.ஸவாஹிர்/

No comments:

Post a Comment