அக்குறணை அல் அஸ்ஹர் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - sonakar.com

Post Top Ad

Saturday, 16 February 2019

அக்குறணை அல் அஸ்ஹர் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி


அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையை இலங்கையில் தலைசிறந்த  ஒரு பாடசாலையாக மாற்றியமைப்பதற்கான வேலைத் திட்டங்களை நாங்கள்; மேற்கொண்டு வருகின்றோம்.  ஒழுக்க மாண்புடனும் கட்டுக் கோப்புடனும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத் தரும் கல்லூரியாக மிளிர்வதற்கு  ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோர்களுடைய நல்;லாதரவும் பங்களிப்பும்  அவசியம் இருத்தல் வேண்டும் மாறாக  பெற்றோர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் ஒரு போதும் தடையாக இருத்தல் கூடாது. இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் அவர்கள் ஊடாக தேவையான  குறைபாடுகளை  நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற் கொண்டு வருகின்றோம். அதேவேளை தற்போது நாட்டில் பெரிதும் பேசப்படும்  போதை ஓழிப்பு நடவடிக்கைகளிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து மாணவர்களை பாதுகாக்கும் விடயத்தில் மிகுந்த அவதானத்துடன்  செயற்பட வேண்டும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில்  ஏ. எல். அன்வர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

எனினும் துரதிருஷ்டவசமாக சில பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதே போன்று பாடசாலை விவகாரங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஏனோ தானோ என்ற நிலையில் உள்ளனர். இன்று மாணவர்களின் கல்விக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருப்பது போதைப் பொருள் பாவனையாகும். பல பெரிய பாடசாலைகளில் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த தாக்கத்தில் இருந்து எமது பிள்ளைகளை மாணவர்களைக் காப்பாற்றிட ஆக்கபூவமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் சம்மந்தமாகவும் அதனால் ஏற்படும் அழிவு சம்மந்தமாகவும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடாத்தி அதில் இருந்து எமது மாணவர்களை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கல்லூரியின் வளர்ச்சியானது சுமார் 112 ஆண்டுகளைக் கடந்து  விட்ட நிலையில் உள்ளன. பல வைத்தியாகளையும் பொறியியலாளர்களையும் துறைசார் நிபுணர்களையும் கல்விமான்களையும உருவாக்கிய பாடசாலையாகும். இப்படிப் பட்ட பெரிய வரலாற்றைக் கொண்ட பாடசாலையை மென்மேலும் கட்டி எழுப்புவதற்கு தம்மால் இயன்ற  முழுப் பங்களிப்புக்களையும் வழங்கத் தயாராக இருக்கின்றேன் அமைச்சர் தெரிவித்தார்

விசேடமாக கல்வி என்பது வெறும் போதனைகளால் மாத்திரம் ஆனதொன்றல்ல விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுதல் முக்கியமானதாகும். இப்பாடசாலையின் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ அழைத்து வர நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனர்களாக  கட்டுகஸ்தோட்டை கல்வி வலயப் பணிப்பாளர் ஆர். ஜி. ஆனந்தசிரி,  அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் எம். ஐ. இஸ்திஹார், தொழிலதிபர் டி. ஜி. எஸ். எம். எம். நிஷைஹர் ஆகியோருடன் கட்டுகஸ்தோட்டை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ. ஹாசிம், உடற்கல்விக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் சில்வா,  பரூதா, இலங்கசிங்க உள்ளிட்ட பல முக்கிய பிரகமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மஞ்சள் இல்லம்  610 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும்  பச்சை இல்லம் 558 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் நிலநிற இல்லம் 417 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் முறையே பெற்றுக் கொண்டன.

-இக்பால் அலி    

No comments:

Post a Comment