மேல் மாகாண ஆளுனர் - மு.ரஹ்மான் MP சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Friday 15 February 2019

மேல் மாகாண ஆளுனர் - மு.ரஹ்மான் MP சந்திப்புமேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி - கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இடையே இன்று முக்கிய சந்திப்பொன்று ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


வெள்ளவத்தையில் முஸ்லிம் பெண்கள் பாடசாலையொன்றை ஆரமபிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அதற்கான காணி ஒதுக்கீடு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் இருவரும் அது தொடர்பில் இன்று கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த காணி கொழும்பு மாநகரசபைக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவதையடுத்து நாளைய தினம் அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு தீர்வைக் காண்பதற்கு ஆளுனர் தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக சோனகர்.கொம்முக்கு அறியக் கிடைத்துள்ளது.

முஜிபுர் ரஹ்மான் முயற்சியிலேயே குறித்த பெண்கள் பாடசாலைக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-AM
No comments:

Post a Comment