ம'களப்பு: தமிழ் பாடசாலைகளை தரமுயர்த்த ஹிஸ்புல்லா நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday 31 January 2019

ம'களப்பு: தமிழ் பாடசாலைகளை தரமுயர்த்த ஹிஸ்புல்லா நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் கிழக்கு ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாவை  ஆளுநர் செயலகத்தில் நேற்று சந்தித்தார். 

பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியதோடு அதற்கான தீர்வு திட்டம் தொடர்பாக பேசப்பட்டது.

மேலும்  அப் பகுதியை சேர்ந்த மூன்று பாடசாலைகளை உடனடியாக தரமுயர்த்துவற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார் . மேலும் பின்தங்கிய பாடசாலைகளுக்குரிய சகல உதவிகளையும் வழங்குவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-ALM Rifas

No comments:

Post a Comment