கட்டுநாயக்க: புதிய வகை கஞ்சாவுடன் ஈரானிய பெண் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 January 2019

கட்டுநாயக்க: புதிய வகை கஞ்சாவுடன் ஈரானிய பெண் கைது!


புதிய வகை கஞ்சாவுடன் இலங்கைக்குள் நுழைய முனைந்த 24 வயது ஈரானிய பெண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.குஷ் கஞ்சா என அறியப்படும் குறித்த போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் எடுத்து வர முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 5 லட்ச ரூபா எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தோஹாவிலிருந்து கொழும்பு வந்த விமானத்திலேயே இப்பெண் பயணித்துள்ளதுடன் இவ்வகை கஞ்சா இலங்கையில் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதற்தடவையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment