மஹிந்த தேசப்பிரிய விரும்பிய நேரத்தில் தேர்தலை நடாத்த முடியாது என தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.
மாகாண சபை தேர்தலுக்கு முன்னராக ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி எந்தத் தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார் எனவும் தெரிவிக்கிறார்.
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தற்போது 'வழிமுறை' இல்லையெனவும் பழைய முறைமை அமுலில் இருந்திருந்தால் இந்நேரம் அதனை நடாத்தியிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்ற அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கிய சர்ச்சையை நாடாளுமன்றில் வந்து முதலில் தீர்க்க வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment