பாடசாலைகளில் வசூல்: சுற்று நிருபம் ரத்து: அகில விராஜ் அதிரடி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 January 2019

பாடசாலைகளில் வசூல்: சுற்று நிருபம் ரத்து: அகில விராஜ் அதிரடி!


பாடசாலைகளில் பண வசூலிப்பினை நியாயப்படுத்தும் வகையில் ஆதாரம் காட்டப்பட்டு வந்த, கடந்த வருடம் ஜுன் மாதம் வெளியிடப்பட்ட 26ஃ2018 இலக்க சுற்று நிருபத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ காரிய வசம்.


அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பெற்றோரிடமிருந்து பணம் பெறுவதை நெறிப்படுத்தும் நோக்கிலேயே குறித்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்த போதிலும் அது முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, பெற்றோர் இடர்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டு வந்ததன் பின்னணியில் அகில இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் இதற்கான அறிவிப்பை மேற்கொண்ட அகில அதனை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment