துமிந்த சில்வாவுக்கும் 'பொது மன்னிப்பு': ஹிருனிகா விசனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 January 2019

துமிந்த சில்வாவுக்கும் 'பொது மன்னிப்பு': ஹிருனிகா விசனம்!


தனது தந்தையைக் கொன்ற விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி முயல்வதாக விசனம் வெளியிட்டுள்ளார் ஹிருனிகா பிரேமசந்திர.துமிந்தவுக்கு பொது மன்னிப்கை வழங்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் கொழும்பில் பொது மக்களிடம் கையொப்பங்கள் சேகரிக்கப்படுவதாகவும் இத்திட்டமே ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடப்பதாக தனக்கு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஹிருனிகா மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டத்திற்கமைவாக ஞானசார முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்த அதேவேளை, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அவரை விடுவிக்கக் கோரி இன்று அனைத்து பௌத்த பீடங்களின் மகாநயக்கர்களும் இணைந்து கடிதம் அனுப்பி வைத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment