2012ம் ஆண்டு சட்டவிரோத பீடி வகையை வைத்திருந்து அகப்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதைத் தவிர்ப்பதற்கு 5000 ரூபா லஞ்சம் பெற்ற தங்கல்ல மதுவரித் திணைக்கள அதிகாரியொருவருக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
அத்துடன் லஞ்சமாய் பெற்றுக்கொண்ட 5000 ரூபாவையையும் மேலதிகமாக 24,000 ரூபாவையும் அபராதமாக செலுத்தவும் குறித்த நபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரச அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு எதிராக எச்சரிக்கும் வகையிலும் சமூக மத்தியில் லஞ்சம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment