கட்சி முறுகல்: கைவிடப்பட்ட அசாத் சாலிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 January 2019

கட்சி முறுகல்: கைவிடப்பட்ட அசாத் சாலிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!


மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொண்டு வரப்பட முயற்சிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மாகாண சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முறுகலால் கைவிடப்பட்டுள்ளது.நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக்கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைந்து முன் வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்த போதிலும் ஈற்றில் அதற்கான பொறுப்பையேற்பது யார்? என்பதில் ஏற்பட்ட முறுகலால் குறித்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாள கையொப்பங்களை சேகரிக்கச் சென்ற வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்த அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி அதனை விரும்பவில்லையாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஐ.தே.கட்சியின் கமல் த சில்வா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐ.ம.சுகூட்டமைப்பின் மஹேஷ் அல்மேதா தனக்கும் அவசியமில்லையென எதிர்த்துப் பேசியிருந்ததோடு ஈற்றில் இம்முயற்சி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-AM

No comments:

Post a Comment