கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தோர் சுற்றி வளைக்கப்பட்டு இடம்பெற்ற தேடல் சம்பவத்தில் பின்னணியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடற்படையினர் சிலர் காயமுற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ராசிக் முஹமத் என அறியப்படும் 22 வயது நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டதில் கடற்படையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் மூவர் தப்பியோட முனைந்த நிலையில் அதில் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment