நாமல் மந்திராலோசனை: கூடுமிடம் பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை: JO - sonakar.com

Post Top Ad

Wednesday 5 September 2018

நாமல் மந்திராலோசனை: கூடுமிடம் பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை: JO


ஜனபலய எனும் பெயரில் இன்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தொடர்ந்தும் கொழும்பு நோக்கி ஆதரவாளர்கள் அனுப்பப் பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.ஒவ்வொரு பேருந்திலும் ஒரு அமைப்பாளரும், அவரை நெறிப்படுத்த ஒரு கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சட்ட ஆலோசனை வழங்கும் நிமித்தம் ஒரு சட்டத்தரணியும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் குறுந்தகவல் மூலம் தமக்கிடையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கினர்.

எனினும், கொழும்பில் எங்கு கூடுவது என்பது குறித்து இறுதிக் கட்ட ஆலோசனை நடந்து வருவதாகவும் 1 மணியளவிலேயே தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment