
உலகின் மூன்றாவது பெரிய பள்ளிவாசலாக உருவெடுத்து வரும் அல்ஜீரியாவின் 'ஜெமா அல் ஜெஸர்' என பெயரிடப்பட்டுள்ள பள்ளிவாசல் நிர்மாணம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இவ்வருட இறுதியில் அல்லது 2019 முதற்பகுதியில் திறக்கப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது அல்ஜீரிய அரசு.
2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் குறித்த பள்ளிவாசலின் மினரத்தே மிக உயர்ந்த மினரத்தாக இருக்கும் எனவும் உலகின் மூன்றாவது பெரிய பள்ளிவாசல் எனும் அந்தஸ்த்தையும் பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 120,000 பேர் ஒரே நேரத்தில் தொழக் கூடிய வசதியுடன் குறித்த பள்ளிவாசல் நிர்மாணம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment