ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதன் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாது என தெரிவிக்கிறார் முன்னாள் ஜே.வி.பி மாகாண சபை உறுப்பினர் லால் காந்த.
கூட்டு எதிர்க்கட்சியினரால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் பொது மக்களுக்கு அசௌகரியங்களை உருவாக்குவதை விடுத்து வேறு எதையும் சாதிக்கப் போவதில்லையென ஏலவே கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதுடன் நாமல் ராஜபக்ச தனக்கெதிரான வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இம்முயற்சியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, ஆர்ப்பாட்டங்களால் ஒரு போதும் அரசைக் கவிழ்க்க முடியாது என ஜே.வி.பி முக்கியஸ்தர் லால் காந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment