
செப்டம்பர் 5ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பு நோக்கிய மக்ககள் சக்தி என பெயரிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினை மையப்படுத்தி பாடசாலைகள் மூடப்படப்போவதில்லையென தெரிவிக்கிறார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.
குறித்த நாள் பாரிய போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அந்நாளை அரச விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என ஏலவே கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லையென அமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment