
பேருந்து நடாத்துனர் ஒருவரிடம் போலி நாணயத்தாளை மாற்ற முனைந்த அம்பாறையைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் இன்று காலை புறக்கோட்டையில் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ்தியன் மாவத்தையில் வைத்து குறித்த நபர் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர் வசம் மொத்தமாக 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் காணப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment