
பாகிஸ்தானுக்கு வருடாந்தம் வழங்கி வரும் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.
தம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தீவிரவாதத்தை அடக்குவதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லையென ட்ரம்ப் பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, புதிய பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவின் கொலைக்களமாக பாகிஸ்தான் செயற்படாது என அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment