
சத்துர சேனாரத்னவின் திருமணம் அலரி மாளிகையில் இடம்பெற்றமை கூட்டு எதிர்க்கட்சியினரால் பேசு பொருளாக்கப்பட்டதையடுத்து தமது காலத்தில் அவ்வாறு எதுவும் நிகழவில்லையென மஹிந்த தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மஹிந்த தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.இப்பின்னணியில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அன்ஜலோ மத்தியுசின் திருமண வைபவம் மஹிந்த மற்றும் கோத்தா பிரசன்னத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதற்கான ஆதாரமாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சத்துரவின் திருமணம் முறைப்படி கட்டணம் செலுத்தி நடாத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்ற அதேவேளை, மத்தியுசின் திருமண நிகழ்வுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லையெனவும் ஆளுந்தரப்பினர் தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment