
ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஞானசார தேறி வருவதாகவும் இன்னும் ஒரு வார காலத்தில் அவரை சிறைச்சாலைக்கு மாற்ற முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2009 யுத்த நிறைவின் பின் கிறிஸ்தவ சமூகத்தை இனரீதியான அடக்குமுறைக்குட்படுத்தி, பின் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பாரிய வன்முறைகள் அரங்கேறக் காரணியாக செயற்பட்ட ஞானசார, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருட கடூழிய தண்டனை பெற்றுள்ளார்.
இந்நிலையிலேயே, சத்திர சிகிச்சை நிறைவடைந்து தற்போது உடல் நிலை தேறி வருவதாகவும் ஒரு வாரத்தில் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தீர்ப்பை எதிர்த்து ஞானசார உச்ச நீதிமன்றை நாடவுள்ளமையும் கடந்த தடவை வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையிலிருந்து பிணை பெற்று தப்பித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment