
தான் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது அக்கால கட்டத்தில் சுமார் 90 பிக்குகள் சிறையிலடைக்கப்பட்டிருந்ததாகவும் பிக்குகள் சிறை செல்வது ஒன்றும் புதிய விடயமில்லையெனவும் தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.
பயங்கரவாதி ஞானசாரவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் சில கடும்போக்கு தீவிரவாத பிக்குகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் விசனம் வெளியிட்டு வருவதுடன் பௌத்தம் நிந்திக்கப்படுவதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றார். இதற்கு பதிலளிக்குமுகமாகவே பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் தவறிழைப்பவர் யாராக இருந்தாலும் சிறையிலடைக்கப்படுவதில் தவறில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment