
அவுஸ்திரேலியாவில் அமைப்புக்காகப் பணியாற்றியதாகவும் முன்னாள் பிரதமரரையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் இலக்கு வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள இலங்கைப் பிரஜை முஹமத் நிசாம்தீன் (25) தனது உறவுக்காரர் என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா அது குறித்து அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது தங்கையின் மகனான குறித்த நபரைக் குடும்பத்தினர் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாதவர் எனவே நம்புவதாகவும் அவரை யாரோ மாட்டி விட்டிருப்பதாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலிய நீதித்துறையின் செயற்பாடுகளை மதிப்பதாகவும், தான் அமைச்சர் என்பதற்காக அரசூடாக எந்த முயற்சியிலும் ஈடுபடப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குறித்த நபர் தனியாகவே திட்டம் தீட்டியிருப்பதாகவும் தாக்குதல் நடாத்தக் கூடிய அளவு திறமையற்றவர் எனவும் அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கைதானவரின் விசா இம்மாதம் நிறைவுற இருந்ததாகவும் பைசர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment