
உள்நாட்டு விமான சேவை இரு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவை சுற்றுலாப் பயணிகளிடம் பாரிய வரவேற்பைப் பெறத் தவறியுள்ள நிலையில் கொழும்பு - மட்டக்களப்பு - திருகோணமலை - பலாலி மற்றும் சீகிரிய பகுதிகளுக்கான உள்நாட்டு விமான சேவையை உள்ளூர் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை முன்னேற்றும் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment