முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டம்: அறிக்கை முரண்பாட்டை தீர்க்க முயற்சி! - sonakar.com

Post Top Ad

Friday 7 September 2018

முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டம்: அறிக்கை முரண்பாட்டை தீர்க்க முயற்சி!


முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து தனியார் சட்டம் தொடர்பான விடயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு  தற்போது இரண்டு குழுக்களாக முஸ்லிம் சமுகம் மாறியிருப்பதால் அதில் திருத்தம் செய்து ஒரு சட்டமாக கொண்டு வருவதற்கு முஸ்லிம் சமுகம் முன்வந்துள்ளதால் இந்த விடயத்தை சரியான முறையில் செய்வதற்கு வை.எம்.எம்.ஏ பேரவை முன்வந்துள்ளது.


இரண்டு கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் தற்போது நீதியமைச்சரிடம் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து தனியார் சட்டம் தொடர்பான வரைவு கைகளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை ஒரே வரைவாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றுவதற்கு வை.எம்.எம்.ஏ பேரவை இந்த முயற்சியை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தில் 10 விடயங்களில் இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதால்  அதனைத்  திருத்தம் செய்யும் பொருட்டு முஸ்லிம் சமுகம் முன்வந்துள்ளதால்; நாளை 9ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு 3இல் உள்ள மண்டரினா ஹோட்டலில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை நடாத்துவதற்கான விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தலைவரும் இந்த தேசியப் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பின் தலைவருமான கே.என். டீனின் தலைமையில் நேற்று (07) மாலை தெமடகொடயில் உள்ள பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது.

வை.எம்.எம்.ஏ பேரவை எடுத்துள்ள இந்த முயற்சி வேறு ஒரு தனியான அறிக்கையை சமர்ப்பிப்பதல்ல என்றும் மாறாக அந்த இரண்டு கருத்து வேறுபாடுகளையும் எவ்வாறு ஒரு கருத்தாக மாற்றலாம் என்பது தொடர்பான கருத்தரங்கினையே செய்யவுள்ளோம் நாங்கள் 2009இல் செய்ய திருத்தத்தையும் தற்போதுள்ள திருத்தத்தையும் ஒன்று சேர்த்து ஒரு சட்டமாக மாற்றுவதற்கு குறித்த கருத்தரங்கில் முஸ்லிம் சிவில் சங்ங அமைப்புக்கள், முஸ்லிம் சட்டத்தரணிகள். முஸ்லிம் உலமாக்கள், அறிவுசார்hந்தவர்கள், முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் இத்திருத்தச் சட்டத்தில் ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட ஆறு தரப்பினரையும் அழைத்துள்ளதாக பேரவையிக் பத்திரிகையாளர் மாநாட்டில் தலைவர் தெரிவித்தார்.

இதன்போது முஸ்லிம்களுடைய சட்டம் நல்லதொரு ஒரு சட்டமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் இந்தக் கருத்தரங்கை வைக்கவுள்ளதாகவும் இது முடிவடைந்த பிறகு நாங்கள் வந்தவர்களின் ஒரு அபிப்பிராயத்தை எடுத்து ஒரு சட்டமாகா மாற்றலாமா என்பதற்கு நீதியமைச்சர் மூலம் நியமிக்கப்பட்ட தலைவரையும் சந்தித்து அவர்கள் கருத்து வேறுபாடில்லாமல் எங்களுடைய சமுகத்திற்கு ஒரே சட்டமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளதால் இந்தக் கருத்தரங்கின் மூலம் அது அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி அஷ்ரப் ரூமி  தெரிவித்தனர்.

மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம் றிஷ்மி, பேரவையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி அஷ்ரப் ரூமி, தேசியப் பிரச்சினையின் தலைவர் கே.என்.டீன், சட்டத்தரணி எம்.ஐ.எம்.நளீம், முன்னாள் சிரேஷ்ட தலைவர் காலித் எம் பாறுக் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றிருந்ததுடன் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment