
தனது புதல்வன் நாமல் ராஜபக்ச 35 வயதையெட்டாத காரணத்தினால் சகோதரர்களுள் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என மஹிந்த தெரிவித்துள்ளமை நேரடியாக கோத்தபாயவுக்கு மஹிந்தவால் வழங்கப்பட்ட ஆசீர்வாதம் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என கம்மன்பில - விமல் வீரவன்ச தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. எனினும், மஹிந்த ராஜபக்சவின் குடும்ப பாசம் அழிவையே தேடித்தரும் என குமார வெல்கம எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க பிரஜையான கோத்தாவை விட சமல் ராஜபக்சவுக்கே முழுத் தகுதியிருப்பதாகவும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றமையும் மஹிந்த ராஜபக்ச தான் நேரடியாகவே மீண்டும் போட்டியிடுவதற்கான வழிமுறையைத் தேடி வழக்காடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment