
2012ம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தோடு பயங்கரவாதியாக வளர்ச்சி கண்ட ஞானசார அவ்வருடம் ஜுன் மாதம் நெடுஞ்சாலை பாதுகாப்பு அரண் ஒன்றருகே பொலிசாருடன் பாரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த காணொளி வேகமாக பரவியிருந்தது.
அப்போது பொலிஸ் ஊழியரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்த ஞானசார, அங்கிருந்த தடுப்புகளையும் சேதப்படுத்திச் சென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்துப் பராமரிக்கப்படும் ஞானசாரவுக்கு எதிராக மேற்கண்ட சம்பவத்தின் பின்னணியில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை 17ம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த சம்பவமடங்கிய காணொளி:
No comments:
Post a Comment