சமூகத்தைப் பாதுகாக்க மஹிந்தவுடன் சேர்ந்திருந்த அஸ்வர்: ஹிஸ்புல்லா - sonakar.com

Post Top Ad

Sunday 2 September 2018

சமூகத்தைப் பாதுகாக்க மஹிந்தவுடன் சேர்ந்திருந்த அஸ்வர்: ஹிஸ்புல்லா

முன்னாள் அமைச்சர் ஏ. எச்.எம். அஸ்வர் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் கடைசிவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தது முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் தூரநோக்கிலாகும் என நெடுஞ்சாலைகள் வீதிப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த நினைவு தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்திலே பாங்கு சொன்னவுடன் அதே நிமிடத்தில் தொழும் மனிதராக இருந்த அஸ்வர், இறுதிக் காலத்திலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு இருந்ததினால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால்,மஹிந்த ராஜபக்ஷவோடு இறுதிக் காலம்வரை இருந்து  முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகஎவ்வளவு தூரம் விமர்சித்த போதிலும் அதுபற்றி அவர் கவலைப்படாமல் தூர நோக்கம் கருதி எடுத்த முயற்சிகள் ஏராளம். அதுதான் அரசியல் தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய பண்பு. விமர்சனங்கள் பற்றி நாம் ஒரு போதும் கவலைப்படக் கூடாது. இந்தச் சமூகம் இன்று நல்லவிதமாக விமர்சிப்பார்கள். நாளை மோசாக விமர்சிப்பார்கள். நான் எனது 30வருட அரசியலிலே பார்த்த விடயம் இது. இவர்கள் இப்படி விமர்சிக்கிறார்களே என்று நினைத்தால் நாங்கள் தூர நோக்கம் கொண்டு அரசியல் செய்ய முடியாது. எனவேஎது சமூகத்துக்கு சரியானது என்று படுகின்றதோ அதை அந்த சந்தர்ப்பத்திலே பேசிஅந்த சந்தர்ப்பத்திலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைகளிடம் இருக்கின்றது.
எனவே எந்த விமர்சனத்தையும் கருத்தில் எடுக்காது இறுதிவரை அவர் ஒரே அரசியல் நிலைப்பாட்டிலே இருந்தார்.  விஷேடமாக அவர் மூன்று மொழிகளிலும் திறமையாக  பாராளுமன்றத்திலே முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசுவார். இவ்வாறு அமைச்சர்களிடம்கல்விமான்களிடம் இருந்து கொண்டு அவர் முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை என்றும் மறக்க - மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment