
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
எல்லை நிர்ணயம் நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும் புதிய முறைமையிலேயே தேர்தலை நடாத்த வேண்டும் என மைத்ரி அணி தெரிவித்து வருகிறது. எனினும், ஏனைய அனைத்து கட்சிகளும் அதனை எதிர்த்து வரும் நிலையில் தேர்தல் ஆணையாளர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களை தாமதப்படுத்தி நடாத்தி ஆளுந்தரப்பு படு தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்நிலையில், நவம்பரில் வேட்பு மனுக்களை கோரவுள்ளதாகவும் மஹிந்த தேசிப்பிரிய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment