
பிரபல பாதாள உலக பேர்வழி மாகந்துறே மதுஷின் தந்தை மரண ஊர்வலத்தில் ஹெலிகப்டரிலிருந்து மலர் தூவப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறையிலடைக்கப்பட்டுள்ள போதிலும் வெளியில் பல்வேறு நடவடிக்கைகளை மதுஷ் வழி நடாத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாத்துவயில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குறித்த நபர் உயிரிழந்திருந்தமையும் அவரது இறுதி ஊர்வலத்திலேயே இவ்வாறு ஹெலிகப்டர் மலர் தூவல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment