
நாளை மறுதினம் 5ம் திகதி அம்பாறை, காலி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சர்வதேச சுனாமி பயிற்சிக்கான ஆயத்தங்கள் நிகழ்ந்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முப்படை மற்றும் அவசர சேவைகள், பிரதேச மக்களும் இப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர் என அமைச்சர் பாலித ரங்கே பண்டார விளக்கமளித்துள்ளார்.
இதன் போது, நாடளாவிய ரீதியிலான சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment