கொழும்பு: சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 14 தாய்லாந்து பெண்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 13 September 2018

கொழும்பு: சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 14 தாய்லாந்து பெண்கள் கைது!கொழும்பு, கொல்பிட்டி, மரைன் டிரைவ் பகுதியில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 14 தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இயங்கி வந்த SPA ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த பெண்கள் 30 நாள் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் வந்து சட்டவிரோதமாக பணியில் சேர்ந்துள்ளதுடன் மாதாந்தம் தலா 2 லட்சம் ரூபா வரை ஊதியமாகப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.20 - 45 வயது வரையான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அனைவரும் நாடு கடத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment