மைத்ரி - கோத்தாவை கொலை செய்ய திட்டம்: பொலிசில் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Thursday 13 September 2018

மைத்ரி - கோத்தாவை கொலை செய்ய திட்டம்: பொலிசில் முறைப்பாடு!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் கொலை செய்யத் திட்டம் தீட்டப்படுவதாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளது தூசன விரோதி பலகாய எனும் புதிய அமைப்பு.


பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுடனான உரையாடல்களை அடிப்படையாக வைத்து இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மா அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

2020ல் கோத்தாவும் மைத்ரியும் கை கோர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதனைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் எனவும் பாதாள உலக பேர்வழிகளைப் பயன்படுத்தியாவது தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்ததாக முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment