ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு: இரயில்வே வேலை நிறுத்தம் முடிவு! - sonakar.com

Post Top Ad

Sunday 12 August 2018

ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு: இரயில்வே வேலை நிறுத்தம் முடிவு!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாக இரயில்வே வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாத அறிவிக்கப்பட்டுள்ளது.



பொது மக்களுக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய ஐந்து நாள் போராட்டம் இதன் பின்னணியில் முடிவுக்கு வந்துள்ளது.

வேலை நிறுத்தத்தை கைவிட்டால் மாத்திரமே தன்னுடன் பேச முடியும் என அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்திருந்த நிலையில் ஜனாதிபதியை அவரது பொலன்நறுவ இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக இரயில்வே தொழிற்சங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment