
தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அரச இயந்திரத்தை முடக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்திட்டத்தின் அங்கமாகவே ரயில்வே வேலை நிறுத்தம் இடம்பெற்றதாக அரச தரப்பு தெரிவிக்கிறது.
வேலை நிறுத்தத்தை முன்னெடுத்த ரயில்வே தொழிற்சங்கமொன்றின் செயலாளர் இந்திக தொடங்கொட, பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவென்பதோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும் முக்கிய அங்கம் வகிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின் தற்போது வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள அதேவேளை வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ரயில் சேவையை 'அத்தியாவசிய' சேவையாக அரசு பிரகனடப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment