
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என தான் சொல்லவில்லையென தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இன்று எதிர் நோக்கும் பிரச்சினைகள் இருக்கவில்லையென்பதையே தான் தெளிவு படுத்த முனைந்ததாகவும் அதற்கிடையில் இருந்த பதற்றத்தில் வார்த்தைகள் தனது அர்த்தத்தை திரிபுபடுத்தியிருக்கலாம் எனவும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இது தொடர்பில் உரையாடிய விஜயகலா மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடாத்தவுள்ள அதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை விஜயகலா இது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment