
விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்குவதே தற்போதைய நோக்கம் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது ஒழுக்காற்று விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் ஹரின் பெர்னான்டோ.
இதேவேளை, விஜயகலா தாம் நேற்று முன் தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஹரின் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு பிரபாகரன் உருவாவதை ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்கப் போவதில்லையெனவும் ஹரின் பேர்னான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment