
இலங்கையை கடன் வலைக்குள் தள்ளி ஆளுமையை அதிகரித்துக் கொள்வதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, தமக்கு அவ்வாறு எந்த எண்ணமுமில்லையென தெரிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்க பத்திரிகையான நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் சோடிக்கப்பட்டவையென தெரிவித்துள்ள சீனா, இலங்கை இந்து சமுத்திரத்தின் வர்த்தக மையமாக வளர்ச்சி பெறுவதற்கான ஒத்துழைப்பை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுக்கு சீனா ஆறு மில்லியன் டொலர் பணம் முதலிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment